• Jul 24 2025

சினிமாவுக்காக ஏன் இவ்வளவு டைம் வேஸ்ட் பண்றீங்க- ரசிகர்களுக்கு துணிவு பட இயக்குநர் கொடுத்த அட்வைஸ்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் இப்படத்தின் இயக்குநரான எச்.வினோத் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் அண்மையில் ஓர் பேட்டியில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது  “தமிழ் சினிமால உச்ச நட்சத்திரங்கள்னு ஒரு 10 - 15 பேர் இருக்காங்க. அவர்களது ரசிகர்கள் செலவிடும் நேரம் தான் அவங்களோட படத்துக்கான ப்ரமோஷன். 100 கோடி ரூபாய் செலவு செய்தாலும் அதுமாதிரி ப்ரமோஷன் யாராலையும் பண்ண முடியாது. அவ்ளோ நேரம் செலவழிக்கும் ரசிகனுக்காக அந்த ஹீரோவாலையும், ப்ரெடக்‌ஷன் டீமாலும் என்ன செய்ய முடியும்.


ரசிகர் செலவழிக்கும் நேரத்தை யாராலையும் ஈடுகட்ட முடியாது. ஏன் சினிமாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என ராமதாஸ், சீமான், திருமாவளவன் ஆகிய அரசியல்வாதிகள் டென்ஷன் ஆகிறார்கள். அவர்களது கோபமும் நியாயம் தான். ரசிகர்கள் இவ்வளவு நேரத்தை சினிமாவுக்காக செலவழிக்க வேண்டியது இல்லை.

பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகுதுன்னா, 3 நாள் முன்னாடி முன்பதிவு ஆரம்பமாகும். உங்களுக்கு எந்த படத்தோட ட்ரெய்லரோ, போஸ்டரோ பிடிச்சிருக்கோ அந்த படத்தை பாருங்கள். இல்ல இன்னொரு படம் நல்லா இருந்ததுனா அதை போய் பாருங்க. இவ்ளோ தான் சினிமாவுக்காக ரசிகர்கள் செலவு செய்ய வேண்டிய நேரம். நிறைய டைம் வேஸ்ட் பண்றீங்க. உங்களுக்கான நேரத்தை உங்களைவிட யாராலும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியாது” என ரசிகர்கள் மீதுள்ள அக்கறையில் எச்.வினோத் பேசியுள்ள இந்த பேட்டி வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement