• Jul 24 2025

ஏற்கெனவே திருமணம் ஆனவரை திருமணம் செய்தது ஏன்?- மதுரை முத்து கூறிய காரணம் என்ன தெரியுமா?

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

மதுரை முத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேடை, தொலைக்காட்சி சிரிப்புரையாளர் ஆவார். மேலும் இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 


இவர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்சன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக பரந்து அறியப்பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் இவர் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும், இவர் இருந்துள்ளார். இவர் லேகா என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். ஆனால் லேகா கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். 


பின் தனது 32வது வயதில் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மறுமணம் செய்துகொண்டார். அண்மையில் தனது முதல் மனைவி குறித்து ஒரு பேட்டியில் மதுரை முத்து பேசும்போது, என் முதல் மனைவிக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. 


கணவர் இல்லாமல் அவர் படும் கஷ்டத்தை கண்டு வருத்தப்பட்டேன், நான் உங்களை திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்டேன். இரண்டாவது திருமணம் என்பதால் வீட்டில் சம்மதிக்கவில்லை, பல எதிர்ப்புகளுடன் தான் நாங்கள் திருமணம் செய்தோம் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement