• Jul 25 2025

எனக்கு மானம் இல்லை என்று எதுக்கு சொன்னீங்க... விக்ரமனிடம் எகிறும் தனலட்சுமி... வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசன் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. அந்தவகையில் 50 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் 7பேர் வெளியேறி தற்போது 14 பேர் மட்டுமே உள்ளார்கள்.

நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல இந்நிகழ்ச்சியானது சண்டைக்கும், சச்சரவிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த சீசன்களைப்போல இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்குகின்றார்.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு அணிகளாக பிரிந்து ஒருகுழு பழங்குடி மக்களாகவும் மற்றொரு குழு ஏலியன்களாகவும் விளையாடி வருகின்றார்கள்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் விக்ரமனைப் பிடித்து வைத்து ஏலியன்ஸ் அணி வெறுப்பேத்துகின்றார்கள். அந்தவகையில் தனலட்சுமி "எனக்கு மானம் இல்லையா என்று எதுக்கு கேட்டீங்க, அதனால நான் எவ்வளவு டிப்ரஷன் ஆனேன் தெரியுமா, தயவு செய்து சிரிக்காமல் போங்க" எனக் கத்துகின்றார்.

அதேபோல் ஆயிஷா "நான் வல்லவன், நல்லவன் என்று ஒரு மாஸ்க் போட்டு சுத்திட்டு இருக்கீங்க அது வேணவே வேணாம்" எனக் கூறுகின்றார். அத்தோடு அமுதவாணன் "பகுத்தறிவு பகுத்தறிவு என்று கூறுவீங்களே, அந்த பகுத்தறிவு இப்போ எங்க போச்சு" எனக் கேட்க்கின்றார். ஆனால் விக்ரமன் எதற்குமே அசராது சிரித்த வண்ணமே இருக்கின்றார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement