• Jul 24 2025

'நீயா நானா' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கோபிநாத்.. எதனால் இந்தத் திடீர் முடிவு..? வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று 'நீயா நானா'. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து பல சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம், திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு நடக்கும் பெண்கள் - அப்பெண்களின் கணவர்கள் எனும் தலைப்பில் விவாதம் இடம்பெற்றிருந்தது.


இதில், குறிப்பாக பெண்கள் ஏன் திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு உங்கள் கணவர் அணியும் உடையில் இருந்து இப்படி தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது வரை முடிவு செய்கிறீர்கள் என்ற விவாதம் நடந்தது.


இந்த கேள்விக்குப் பதிலளித்த பெண்கள் தங்களுடைய தாய் பாசத்தில் அப்படி சொல்கிறார்கள் என கூறி இருந்தார்கள். இதனையடுத்து கோபிநாத், அப்போ உங்கள் கணவரின் தாய், அதாவது உங்களுடைய மாமியார் எதாவது சொன்னால் மட்டும் ஏன் ஏற்க மறுக்குறீர்கள் என பெண்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.


இதற்கு மறுபடியும் முதலில் இருந்து தங்களுடைய அம்மா பாசத்தில் சொல்கிறார்கள் எனக் கூற ஆரம்பித்தார்கள். எந்த கேள்வியை கேட்டாலும் அம்மா பாசம், அம்மா பாசம் எனக் கூறிய பெண்களால் நொந்துபோன தொகுப்பாளர் கோபிநாத், நான் நிகழ்ச்சியில் இருந்து ரிட்டைர் ஆகிறேன் என்று கிண்டலாக கூறிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதிலேயே விளையாட்டாக வெளியேறிவிட்டார். அந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement