• Jul 25 2025

குக் வித் கோமாளியில் இருந்து விலகியது ஏன்? கூலாக பதிலளித்த மணிமேகலை!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை.சன் மியூசிக் சேனல் மூலம் தனது பயணத்தை தொடங்கிய அவருக்கு தொகுப்பாளராக இருக்கும்போதே ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர். இதையடுத்து ஹுசைன் என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அவர், அதன்பின் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.இதையடுத்து அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு தான் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

தனது துறுதுறு பேச்சால் குக்குகள் முதல் நடுவர்கள் வரை அனைவரையும் திணறடித்து ஸ்கோர் செய்யும் மணிமேகலைக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழின் காரணமாக சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து அதிலும் கல்லாகட்டி வருகிறார் .


இப்படி சின்னத்திரையில் பேமஸ் ஆனவராக வலம் வந்துகொண்டிருந்த மணிமேகலை நேற்றுடன் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தார்.

இவ்வாறாக பலரும் ஏன் வெளியேறிவிட்டார் என பரபரப்பாக பேசி வந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கூலாக ஒரு பதிவை இட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு



Advertisement

Advertisement