• Jul 25 2025

பாரதியை விவாகரத்து செய்வாரா கண்ணம்மா...பரபரப்பு திருப்பங்களுடன் வெளியான ப்ரமோ...அடுத்து நடக்கப்போவது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் 1000எபிசோட்டுகளை கடந்து  ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்தான் பாரதி கண்ணம்மா.இந்த தொடர்  கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கி  4 வருடங்களை நிறைவடைந்து இருக்கிறது. இந்தத் தொடரில் ஆரம்பத்தில் அருண் பிரசாத் மற்றும் ரோஷிணி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இந்த சீரியல் சூடு பிடிக்க ஆரம்பித்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ரோஷினி சில தனிப்பட்ட காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார் அப்போதே இந்த சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் குறைய தொடங்கியது. பின்னர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். 

அத்தோடு இவரும் ரோஷினி போலவே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் பாரதிக்கு பிறந்த குழந்தைகள் தன் குழந்தைகளே இல்லை என்று ஒரே ட்விஸ்ட்டை இத்தனை வருடங்களாக வைத்து கதையை இழுக்க ஆரம்பித்தார் இயக்குநர். இதன் பின்னர் ரசிகர்களே புலம்ப ஆரம்பித்தனர். தயவுசெய்து சீரியலை முடித்து விடுங்கள் இழுக்காதீர்கள் என்று கெஞ்சி வந்தனர். ஆனால் இயக்குநர் சீரியலை முடிப்பதாகவே தெரியவில்லை கதை எங்கெங்கோ நகர்ந்து கொண்டே இருக்கிறது

 எனினும் தற்போது கண்ணம்மா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான கிராமத்திற்கே சென்று விடுகிறார். அங்கு அவர்களை தேடி வரும் பாரதி அவர்களை சமாதானப்படுத்துவதற்காக ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாரதியை சந்திக்கும் கண்ணம்மா விவாகரத்து செய்யும் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதில் கண்ணம்மா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பற்றி ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. 

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement