• Jul 25 2025

ரீல் லைஃப் நயன்தாரா போல் வாழ ஆசைப்பட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்... வெளியான அதிர்ச்சித் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரியல் லைஃப் நயன்தாராவாக வாழ முடியாத விரக்தியில் ரீல் லைஃப் நயன்தாராவாக போல் ஆவது வாழலாம் என்று நினைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருக்கின்றார் பெண் ஒருவர். 


அதாவது பால் வடியும் முகமாய், அப்பாவி பெண்ணாக டிபன் பாக்சில் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தும் கேரெக்டராக கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்திருப்பார் நயன்தாரா. இதேபாணியில் நிஜத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.


அதாவது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் கஞ்சா மாத்திரைகள், மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் மர்மக் கும்பலால் பரிமாற்றப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்தக் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.


இந்த விசாரணையின் போது இந்தக் கும்பலை சேர்ந்த ஆண் ஒருவரும், சாந்திப்பிரியா என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளனர். பின்னர் பிரேக் அப் ஆனதும் சாந்திப்பிரியா வேறொருவரை திருமணம் செய்து விட்டார். அவரின் கணவர் சிறையில் உள்ளார்.


அவரை மீட்கும் நோக்குடன் சாப்ட் வேர் எஞ்சினியர் போன்று வேடமணிந்து முன்னாள் காதலனுடன் சேர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறாக ரீல் லைப் கோலமாவு கோகிலா பட நயன்தாரா போல வாழ ஆசைப்பட்டு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் பலரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோலமாவு கோகிலா படத்தைப் பின்பற்றி நடந்த இந்த கடத்தல் சம்பவமானது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement