• Jul 25 2025

சீரியலில் நடிக்க மாட்டாரா இதயத்தை திருடாதே நவீன்...வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் நவீன் குமார்.

இவர் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

 சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கண்மணி கர்ப்பமாக இருக்கிறார் என ரசிகர்களுக்கு கூறியிருந்தார்.


மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் கண்மணிக்கு வளைகாப்பு நடந்து முடிந்தது.அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி இருந்தது.

இந்நிலையில், நவீன் மற்றும் கண்மணி இருவரும் இணைந்து காப்பி ஷாப் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

தங்களது வாழ்க்கையில் முதன் முதலில் ஆரம்பித்துள்ள தொழில் இது என்றும், அதற்க்கு ரசிகர்கள் அனைவரின் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி வரும் நிலையில் இனி சீரியலில் நடிக்க மாட்டாரா என கேள்வி கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement