• Jul 23 2025

பிக்பாஸ் மேடையில் மக்களுக்காக பேசிய உலக நாயகன்!! சமூகத்தின் மீது இவ்வளவு அக்கறையா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் பல விஷயங்கள் புதுசு புதுசாக கொண்டுவந்து தன்னுடைய சாமர்த்தியத்தால் நடிப்பிலும், பேச்சிலும், தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து உக நாயகனாக வலம் வருபவர்தான் கமல்ஹாசன்.


விஜய் தொலைகாகாட்சியில் பிக்பாஸ்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிகிட்டதட்ட ஆறு வருடங்களாக வெற்றியடைந்து வருகின்றார்.இதனைத் தொடர்ந்து தற்போது ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஔிபரப்பாகி வருகின்றது. இவருடைய பேச்சை கேட்பதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகின்றார்கள்.

அந்தவகையில் இவர் பேசிய ஒரு விடயம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது. அதாவது சமீபகாலமாக இளைஞர்கள்  மாரடைப்பால் இறந்து போகும் அபாயத்தை குறித்து விழிப்புணர்வாக பேசியிருக்கின்றார். அதில் மூன்று முக்கிய காரணங்களை சொல்லி இருக்கிறார். அதில் சரியான உறக்கம் இன்மை, அதற்கேற்ப சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, மற்றும் உடலுக்கு தேவையான ஆக்டிவிட்டி இல்லாமல் இருப்பது, தான் காரணம் என கூறியிருக்கின்றார்.


இப்போதைய காலத்தில் அனைவரும் கொஞ்சம் சோம்பேறியாகிவிட்டோம். உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதனாலே இது நடக்கின்றது. அதனால் என் தம்பி ,தங்கைகளுக்கும் என்  அன்பினால் சொல்லக்கூடிய விஷயங்கள் இது. அதனால் முடிந்தவரை அனைவரும் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.என சமுகத்தின் மீது இவருக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Advertisement

Advertisement