• Jul 24 2025

வாவ்...கையில் புல்லாங்குழலுடன் கிருஷ்ணனாக மாறிய 'துணிவு' பட நாயகி மஞ்சு வாரியர்..! வைரல் கியூட் போட்டோஸ்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மலையா லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர், கையில் புல்லாங்குழல் வைத்த கண்ணனாக மாறி பரதநாட்டியம் ஆடிய புகைப்படங்கள் வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

மலையா லேடி சூப்பர் ஸ்டார் நடிகை மஞ்சு வாரியர்.இவர் மலையாள நடிகையாக இருந்தாலும், இவர் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தான். கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டம் புல்லு கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மஞ்சு வாரியர், மலையாளத்தில் வெளியான 'சாட்சியம்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து , சல்லாபம், ஈ புழையும் கடந்நு, தூவல் கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து (1997), சம்மர் இன் பெத்லஹேம், உள்ளிட்ட வெற்றித் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். 

இவர் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருதையும், சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

தொடர்ந்து தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் மஞ்சு வாரியர் சமீப காலமாக தமிழிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வங்கியில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை பெற்ற, 'அசுரன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து, தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை வென்றார்.

இதை தொடர்ந்து, நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தில்... கண்மணி என்கிற படு போல்ட்டான பெண்மணியாக நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெறவே இவரை மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க வைக்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

பரதநாட்டிய கலைஞரான இவர், மேடையில் கோகுலத்து... கிருஷ்ணனாக மாறி ராதையை கொஞ்சி குழவி நடனமாடிய சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement