• Jul 24 2025

அந்த மாதிரி வீடியோவைப் பார்த்ததாக கூறிய ரசிகர்.. தரமான பதிலடி கொடுத்த இருட்டு அறையில் முரட்டு குத்து யாஷிகா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். அதுமட்டுமல்லாது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுடார்.


இந்நிகழ்ச்சியின் மூலம் அவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து யாஷிகாவிற்கு பல படவாய்ப்புகள் குவிந்தன. அதுமட்டுமல்லாது படு கவர்ச்சியில் தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டும் வருகின்றார்.


மேலும் யாஷிகா ஆனந்த், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் அப்படி நடந்த உரையாடலின்போது, 'உங்களின் மோசமான வீடியோவை நான் பார்த்திருக்கிறேன்' என்று ரசிகர் ஒருவர் அவரிடம் கூறினார். 


அதற்கு உடனே யாஷிகா சிறிதும் தயங்காமல், 'அப்படியா... அதை எனக்கும் அனுப்புங்கள். அந்த வீடியோவில் நடித்தது பேயாக இருக்கும். இல்லையென்றால் உங்கள் கண்ணில் பிரச்சினை இருக்கவேண்டும்' என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement