• Jul 26 2025

ரிலீஸ் ஆவதற்கு முன் விற்றுத் தீர்த்த யசோதா...கெத்து காட்டிய சமந்தா..வாயடைத்துப்போன திரையுலகம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படம் வெளியாவதற்கு முன்னரே பல கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் யசோதா என்ற படத்தில்  முன்னணி நடிகை சமந்தா நடித்துள்ளார். ஹரிஹரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். 

மணிசர்மா இசையில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தாமதமானதால் வரும் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது

எனினும் இதனை முன்னிட்டு சமந்தா ப்ரோமோஷன் பணிகளில் களமிறங்கியுள்ளார். முன்னதாக myositis என்னும் அரியவகை நோயால் தான் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சமந்தா தெரிவித்தது ரசிகர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அடுத்தடுத்து அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள குஷி, சாகுந்தலம் ஆகிய படங்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி ரசிகர்களிடத்தே எழுந்தது.

ஒருபக்கம், சமந்தாவின் உடல் நிலை கொஞ்சம் மோசமாக இருந்தாலும், அவர் நடித்துள்ள யசோதா படத்தின் ஒடிடி உரிமம் சுமார் 24 ரூபாய் கோடிக்கும், சாட்டிலைட் உரிமம் 13 ரூபாய் கோடிக்கும், ஹிந்தி உரிமம் 3.5 கோடி ரூபாய்க்கும், சர்வதேச உரிமம் 2.5 கோடி ரூபாய்க்கும், திரையரங்கு உரிமம் 10 கோடி ரூபாய்க்கு விலை போகியுள்ளது.

அத்தோடு  பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படமானது, ரிலீஸாகும் முன்னரே 53 கோடி ரூபாய் லாபத்தை சம்பாரித்துள்ளது. சமந்தாவிற்கு, கட்-அவுட் வைத்தும் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


யசோதா படத்தின் ட்ரைலரில், கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகளும் வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement