• Jul 24 2025

நீங்கள் சிறப்பாக செய்கிறீர்கள்"- மகாலட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்- குவியும் லைக்குகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக பணியாற்றி பின் சீரியல் நடிகையாக நடிக்க ஆரம்பித்தவர் மகாலட்சுமி. முன்னணி சீரியல்களான அரசி, வாணிராணி, பிள்ளைநிலா, அன்பே வா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.


தற்போது சன் டிவி சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் போதே சில சர்ச்சைகளில் சிக்கினார். அதன்பின் கணவரை விவாகரத்து செய்து பிரிந்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார்.


பின் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த நாளில் இருந்து பல விமர்சனங்களை சமாளித்து அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்.


மகாலட்சுமி சீரியலிலும் விளம்பரங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். கிடைக்கும் நேரத்தில் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது புடவையில் அழகாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement