• Jul 26 2025

என்னுடைய மகள் போட்டோவை அந்த மாதிரி எடிட் செய்து அனுப்பிறாங்க- கடும் கோபத்தில் ராஜா ராணி சீரியல் மாமியார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் தான் ராஜா ராணி 2. திருமணத்திற்குப் பிறகும் தங்கள் லட்சியங்களை எப்படி அடைகின்றார்கள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. 

அந்த வகையில் இந்த சீரியலில் மாமியார் என்னும் முக்கிய ரோலில் நடித்து வருபவர் தான் ப்ரவீனா. இந்த சீரியலைத் தவிர அவர் சன் டிவியின் இனியா சீரியலில் தற்போது நடிக்க தொடங்கி இருக்கிறார்.


சின்னத்திரையில் அதிகம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் ப்ரவீனா தற்போது ஒரு நபர் தனது போட்டோவையும் மகள் போட்டோவையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு வருவாதாக புகார் கூறி இருக்கிறார்.கடந்த வருடம் தனது போட்டோவை ஆபாசமாக எடிட் செய்து வெளியிட்ட நபர் மீது ப்ரவீனா புகார் அளித்த நிலையில் அந்த நபர் கைதானார். அதன் பின் தற்போது ஜாமினில் வெளிவந்திருக்கிறார் அவர்.

"தற்போது தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் அந்த நபர் செயல்பட்டு வருகிறார். எனது போட்டோ, மகள் போட்டோவை ஆபாசமாக எடிட் செய்து வெளியிட்டு வருகிறார். அவரை பற்றி தற்போது எனது மகள் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்" என ப்ரவீனா கூறி இருக்கிறார்.இது ரசிகர்களிடையே பரபரப்பகப் பேசப்பட்டு வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement