• Jul 26 2025

ஜனனி போனதற்கு நீங்க தான் காரணம்- அமுதவாணன் மற்றும் அசீமுக்கிடையில் வெடித்த சண்டை- பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வார இறுதி என்பதால் நடிகர் கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்களுடன் உரையாடுகிறார்.

 அப்போது, எழுந்து பேசும் அசீம்,"ஜனனியோட வாய்ப்பை பல வகையில பறிச்சிட்டாரு என்பதற்காக இந்த கார்டை அமுதவாணனுக்கு கொடுக்குறேன்" என அசீம் சொல்லிவிட்டு அமுதுவிடம் கார்டு ஒன்றை கொடுக்கிறார். பின்னர், இதுகுறித்து அசீம் மற்றும் அமுதவாணன் கிச்சன் பகுதியில் வாக்குவாதம் செய்கின்றனர்.


அப்போது, அமுதவாணன், "அது 100 சதவீதம் பொய் அசீம்" என்கிறார். இதனை கேட்ட அசீம், ஜனனிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்கிறார். தொடர்ந்து இதனை அமுதவாணன் மறுத்ததுடன் "இந்த கார்டு உனக்கு சேரவேண்டியது அசீம்" என்கிறார். அப்போது அசீம் "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" என்கிறார். 

இதனை கேட்டு அமுதவாணன் "சூப்பர்" என சொல்லிவிட்டு திரும்பி நடந்து செல்கிறார். அப்போது அசீம்,"ஜனனி இந்த வீட்டை விட்டு போக காரணம் நீங்க தான். அவங்களை பயன்படுத்திகிட்டு நீங்க safe ஆகிட்டீங்க, அந்த பொண்ணை வெளியே அனுப்பிட்டீங்க" என்கிறார். இதனால் இன்றைய பிக்பாஸ் போட்டி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.





Advertisement

Advertisement