• Jul 25 2025

அடுத்த சாய்பல்லவி நீங்க தான்- ஜனனியைக் குஷிப்படுத்த அஞ்சலி செய்த காரியம்- கிண்டலடித்து வரும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது 60 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர்.

இவர்களில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் அசீம், ஏடிகே, ஜனனி, கதிரவன், ராம், ஆயிஷா ஆகிய ஆறு போட்டியாளர்கள் இடம்பெற்று உள்ளனர்.


கடந்த வார இறுதியிலேயே இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடத்தப்படும் என கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறிவிட்டு சென்றார்.இதனால் இதில் யார் 2 பேர் வெளியேறப்போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அனைவரும் ஆவலோடு உள்ளனர்.

இந்த நிலையில் தனது படத்தினை ப்ரமோஷன் செய்வதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் அஞ்சலி சென்றிருந்தார்.அங்கே சென்று போட்டியாளர்களுடன் கலந்துரையாடிய அவர் அடுத்த சாய்பல்லவி நீங்க தான் என்று ஜனனியைப் பார்த்து கூறியுள்ளார். இதனால் ஜனனி செம குஷியில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement