• Jul 24 2025

இத ஏத்துக்கவே முடியாது..! அவமதிக்கப்பட்ட நரிக்குறவர் குடும்பம் - ஜி.வி.பிரகாஷ் கண்டனப் பதிவு!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சிம்பு நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள பத்து தல படத்தை பார்க்க வந்தவர்களிடம் ரோகிணி திரையரங்கில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல படத்தின் முதல் காட்சிக்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவரை உள்ளே விட மறுத்த ரோகிணி திரையரங்க ஊழியர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக வலை இதனால் அப்பகுதியில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு சமூக வலை தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பத்து தல படம் U/A சென்சார் பெற்றது என்பதால் 4 சிறார்களுடன் வந்த நரிக்குறவ சமூகத்தினரை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என ரோஹிணி திரையரங்கம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் U/A சென்சார் என்றால் படத்தை பெற்றோருடன் சிறார்கள் பார்க்க அனுமதி என்றுதான் அரத்தம் என ரசிகர்கள் கருத்துக்ககளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பதிவில் கடும் கண்டனம்தெவித்துள்ளார். அதில், "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது" என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement