• Jul 24 2025

மண்டையில இருக்கிற கொண்டையை மறந்திட்டீங்களே- big boss 7 வீட்டிலிருந்து ரித்திகா வெளியிட்ட போட்டோ- அப்போ அங்க போவது உறுதியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ரித்திகா.


இவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வேறொரு நடிகை நடிக்க வந்துவிட்டார் என தகவல் வெளிவந்துள்ளது.இது இவருடைய ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கியுள்ளது.


ராஜா ராணி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த ரித்திகா, அதன்பின் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக களமிறங்கினார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிடுவார்.


அந்த வகையில் நேற்றைய தினம் ஜிம்மில் கடுமையாக வெர்க்கவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இப்படியான நிலையில் தற்பொழுது புதிய புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் பிக்பாஸ் வீடு மாதிரி இருப்பதால் ரித்திகா பிக்பாஸ் வீட்டிற்குச் செல்வதற்காகத் தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினாரா என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement