• Jul 26 2025

எல்லார் கிட்டயும் குறை கண்டுபுடிச்சிட்டே இருக்கீங்க... விக்ரமனிடம் பொங்கிய போட்டியாளர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.இந்நிலையில் 59வது எபிசோட்டில் என்ன நடந்தது  என்பதை பார்ப்போம்...

சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக உள்ளது.மேலும்  அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்து இருக்கிறது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது.  

இதில் அமுதவாணன் மற்றும் மைனா நன்றாக நடித்து வருகிறார்கள்.இதில்,  அந்நியன் கெட்டப்பில் விக்ரமன் இருக்க, நடிகர் சிம்புவின் மன்மதன் கெட்டப்பில் ஆயிஷாவும் இருக்கிறார். இந்த நிலையில், சிம்பு போல விக்ரமனிடம் ஆயிஷா பேசும் விஷயங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

விக்ரமன் ஏதோ பேசிக் கொண்டிருக்க, குறுக்கே பேசும் ஆயிஷா சிம்புவின் ஸ்டைலில், "ஏங்க, நானும் ஆடுறேன்ங்க, நானும் ஏதாவது பண்ண விடுங்க. எத பண்ணாலும் அத பண்ணாத, இத பண்ணாதன்னு. என்ன உங்க பிரச்சனை?. விடுங்க என்ன. ஏற்கனவே பெருசா நடிப்பு வராது. யாரும் சொல்லி குடுக்கல. அப்படி சுத்திட்டு இருக்கேன்னு நானும் ஏதாவது பண்ணனும்லங்க. கொஞ்சம் விடுங்களேன். அத பண்ணாதீங்க, இத பண்ணாதீங்கன்னு சொல்லாதீங்க" என விக்ரமனிடம் கூறிய படி கடந்து செல்கிறார் ஆயிஷா.

பின் தனலட்சுமி எனக்கு பெமோம் பண்ண டைம் கொடுங்க என்று கூறிய போது அவருக்கு சான்ஸ் கொடுத்தார்கள்.அதன் பிறகு பிக்பாஸ் ராமிற்கும் தனலட்சுமிக்கும் விலங்கு போட்டு பெமோம் செய்ய சொன்ன போது  ராம் சிறப்பாகவே செய்தார்.

இதன் பிறகு தனலட்சுமி இதனை எண்ணி எல்லோரிடமும் கூறி புலம்பிக்கொண்டு இருந்தார்.பின் ADK மற்றும் விக்ரமனிற்கும் இடையில் சின்ன மோதல் ஏற்பட்டது.எல்லார் கிட்டயும் குறை கண்டுபுடிச்சிட்டே இருக்கீங்க என கோபத்தில்  ADK விக்ரமனை பார்த்து கூறியிருந்தார்.பின் இருவரும் கொஞ்சம் வாக்குவாதம் செய்து தமது சண்டையை நிறுத்திக் கொண்டனர். 

பின் ரச்சிதா தன்னுடைய கதாப்பாத்திரத்தை செய்து கொண்டே இருந்தார்.அதற்கு பிறகு மணிகண்டன் நேற்றைய பெமோன்ஸில் 15000 வெற்றி பெற்றார்.

பிறகு ஒவ்வொருத்தரும் நன்றாக பெமோம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.இவ்வாறாக இன்றைய எபிசோட் முடிவடைந்தது.





Advertisement

Advertisement