• Jul 25 2025

இப்படி பண்றீங்களேடா..பாவம்டா அந்த மனுசன்...! விருது விழாவில் அவமானப்படுத்தப்பட்ட நெல்சன்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கோலமாவு கோகிலா, டாக்டர் என ஹிட் படங்கள் கொடுத்தவர் இயக்குநர் நெல்சன். அதற்கு பிறகு அவர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. படம் தோல்வி அடைந்த நிலையில் அடுத்து அவர் ரஜினி உடன் கூட்டணி சேர இருந்த படமும் கேள்விக்குறி ஆனது.

ஆனால் ரஜினி தொடர்ந்து அவரது படத்தில் நடிப்பதாக முடிவெடுத்தார். தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் நெல்சன் அவமானப்படுத்தப்பட்டதாக ட்விட்டரில் வீடியோ வெளியாகி இருக்கிறது.]

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வரும்போது அவரை சுற்றி பவுன்சர்கள், கேமராக்கள் அவர் மேடை ஏறும் வரை செல்கின்றனர். ஆனால் நெல்சன் காரில் இருந்து இறங்கி உள்ளே வரும்போது யாரும் கண்டுகொள்ளவில்லை. சில பவுன்சர்கள் சற்று தூரத்திற்கு உடன் வருகின்றனர், அதன் பின் நீங்களே சென்றுவிடுங்கள் என ஒருவர் அவர்களை அனுப்பி வைக்கிறார்.


Advertisement

Advertisement