• Jul 24 2025

காதல் மனைவியின் பிறந்தநாளில் வித்தியாசமான சர்ப்ரைஸ் கொடுத்த யூடியூபர் இர்பான்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

இர்பான் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருபவர் இர்பான். பல்வேறு ஊர்களுக்கு சென்று விதவிதமான உணவு வகைகளை சுவைத்து அதனை ரிவ்யூ செய்து அதனை வீடியோவாக எடுத்து தன் யூடியூப் சேனலில் பதிவிட்டு சம்பாதித்து வருகிறார் .

 இவரது வீடியோக்கள் மக்கள் மத்தியில் மிகவும் ரீச் ஆனதால் தற்போது நன்கு பாப்புலர் ஆகிவிட்டார் இர்பான்.இவரது யூடியூப் சேனல் 35 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது.யூடியூபர் இர்பானுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. 


ஆசிபா என்பவரை திருமணம் செய்துகொண்ட இர்பானுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தன் வீட்டுக்கே அழைத்து விருந்து கொடுத்தார். இதுகுறித்த வீடியோக்களையும் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் இர்பான். 

இந்த நிலையில் இர்பானின் மனைவி இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு இர்பான் சர்ப்ரைஸ் கிப்ட்டுகள் வழங்கியுள்ளார். இது குறித்த வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement