• Jul 24 2025

நம்மளை கவிழ்க்க தான் நிறைய பேர் வேலை பார்த்திட்டு இருக்கிறாங்க- கடும் கோபத்தில் சீரியல் நடிகை சாய்காயத்ரி

stella / 2 years ago

Advertisement

Listen News!


சமீபத்தில் பாணடியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி சீரியலை விட்டு விலகினார்.இதனால் பல்வேறு சேனல்களுக்கும் பேட்டியளித்து வருகின்றார். அந்த வகையில் அண்மையில் இவர் ஓர் பேட்டியில் கலந்து கொண்டு கூறியதாவது 

  “ஈரமான ரோஜாவே சீரியல் நடித்து முடிக்கும் வரை நான் தேர்ந்தெடுத்த கதைகளில்தான் நடிக்க வேண்டும் என்று யோசித்ததில்லை. நான் உண்டு வேலை உண்டு என்று இருப்பேன். குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் என் வேலையை பார்த்துக் கொண்டிருப்பேன். அதற்காக மெனக்கெட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் அந்த சீரியல் முடித்த பிறகுதான் நாம் ஒருபக்கம் வேலை வேலை என்று அதை முழு கவனம் செலுத்தி பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிலர் நம்மைச்சுற்றி (நம்மை கவிழ்க்க) வேலை பார்த்து இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.


எனவே அதன்பிறகு நான் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து, என்னுடைய ப்ராஜெக்ட் வேலையை செய்ய ஆரம்பித்தேன். இதேபோல் நமக்கு பிடிச்ச விஷயத்தை நாம் செய்ய வேண்டும், மற்றவர்களுக்காக அல்ல. சிலரை நம்பி நாம் விசுவாசமாக. இருந்திருப்போம். பெருந்தன்மையாக இருந்திருப்போம். ஒரு சில வேளைகளில் அந்த பெருந்தன்மையே நம்மை வெச்சு செஞ்சிடும். அப்போதும் நாம் திருந்த மாட்டோம். நான் இன்னும் திருந்துவதற்கு முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். எது எப்படியோ தற்போது நான் எனக்குப் பிடித்தவற்றை, எனக்கு திருப்திகரமானவற்றை நான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.


பிஸ்னஸ் பண்ணுவது வேறு. ஆனால் நடிக்கும் பொழுது முதலில் நாம் நமக்கு திருப்திகரமாக நடிக்க வேண்டும். அப்போதுதான் பார்ப்பவர்களுக்கு நம்முடைய பணியில் நாம் எந்த அளவுக்கு கான்பிடென்ட்டாக இருக்கிறோம் என்பது அவர்களுக்கும் புரியும். இல்லையென்றால் அவர்கள் மத்தியில் அது காட்டிக் கொடுத்து விடும். ஆக நாம் செய்யும் வேலைக்கு நாம் உண்மையாக இர்க்க வேண்டும். நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என பேசியுள்ளார்.

Advertisement

Advertisement