• Jul 23 2025

பிரம்மாண்ட ரிலீசுக்கு தயாராகும் "தங்கலான்"... இப்படம் குறித்து மனம்திறந்த நடிகை மாளவிகா மோகனன்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் "தங்கலான்". இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படம் குறித்து மாளவிகா மோகனன் இவ்வாறு கூறியுள்ளார். 

கோலிவுட் சினிமா அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் நடிகர் விக்ரம். இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெரிதாகியது.  


பான் இந்திய சினிமா பாணியில் கங்குவா, கேப்டன் மில்லர் படங்கள் உருவாகி வரும் நிலையில் 'தங்கலான்' படமும் தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 'தங்கலான்' படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 'தங்கலான்' படத்தில் நடிக்கும் நடிகை மாளவிகா மோகனன் படம் குறித்து கொடுத்துள்ள அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் உரையாடிய மாளவிகா மோகனன், இதுவரை நான் நடித்ததில் சவாலான ஒன்று 'தங்கலான்' படம்.


எனக்குள் அவ்வளவு ஒரு உத்வேகத்தை கொடுத்தது இப்படம். எனது நடிப்பு இப்படத்தில் உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன். அவ்வளவு அர்த்தம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement