• Jul 26 2025

மாற்றுத்திறனாளி மாணவன் பரிசாக கொடுத்த ஓவியம்..! கண் கலங்கிய விஜய்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். 

விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அத்துடன் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு சில இடங்களில் அந்த மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி அடைந்தனர்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை வழங்குகினார்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் விஜய் அருகில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் விஜய்க்கு ஒரு ஓவியத்தை பரிசாக வழங்கினார். அதனை பார்த்த விஜய் நெகிழ்ச்சியில் கண்கலங்கினார்.




Advertisement

Advertisement