• Jul 24 2025

வித்தியாசமான 'Animal Flow' யோகா செய்து அசத்திய கீர்த்தி சுரேஷ் இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் மற்றும் தெலுங்கு  ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரம் முன்னணி நடிகை தான் கீர்த்தி சுரேஷ்.குறிப்பாக 'மகாநடிகை ' படத்திற்கு பின்னர் கீர்த்தி சுரேஷ் அதிக பட்சமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகிறார்.   


ஆனால் அவர் கதையின் நாயகியாக நடித்த படங்கள், தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்காததால், மீண்டும் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், உதயநிதிக்கு ஜோடியாக 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.


இதுதவிர  ரிவால்டர் ரீட்டா மற்றும் ரகுதாதா ஆகிய இரண்டு படங்களில், மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக நடித்துள்ள 'தசரா' திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்தடுத்து தொடர்ந்து தன்னுடைய படங்களில் பிசியாக இருந்தாலும்,  புத்துணர்ச்சிக்காக குடும்பத்துடன் அவுட்டிங், நண்பர்களுடன் வெளிநாட்டு ட்ரிப் மற்றும் யோகா போன்றவற்றை செய்து வரும், கீர்த்தி சுரேஷ்... தற்போது 'Animal flow' என்கிற யோகாசனத்தை முதல் முறையான வெற்றிகரமாக செய்து முடிந்துவிட்டதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 





Advertisement

Advertisement