• Jul 25 2025

அப்பா இழந்த சோகத்திலும்.. அஜித் ரசிகர்களுக்காக வந்த குட்நியூஸ்.. ரீ ரிலீஸாகும் 'அமராவதி'.. எப்போ தெரியுமா.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் 62-ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக இருந்த நிலையில், பின்னர் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தது லைகா. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாதம் ரிலீஸ் ஆகும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.


இதன் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் தந்தை மரணமடைந்த செய்தி அதிர்ச்சியாக வந்தது. தற்போது தந்தையை இழந்த சோகத்தில் அஜித் இருப்பதனால் அப்படத்திற்கான அறிவிப்பை தற்போது வெளியிட வேண்டாம் என முடிவெடுத்து இருக்கின்றார்.


இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்காக குட் நியூஸ் ஒன்று வந்திருக்கின்றது. அதாவது அஜித்தின் பிறந்த தினமான மே-1ஆம் திகதி அவரின் முதல் படமான 'அமராவதி' ரீ ரிலீஸ் செய்து வெளியிடப்படுகிறது. இதனை தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் அறிவித்துள்ளார். 

Advertisement

Advertisement