• Jul 23 2025

2குழந்தைகளுக்கு தாயான நடிகை சிம்ரனின்.. ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், மாதவன், பிரசாந்த் எனப் பலருடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் தற்போது தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.


அந்தவகையில் சிம்ரன் சப்தம் எனும் 50-ஆவது படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது இவரின் கைவசம் பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' படமும் உள்ளது. அதாவது பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா, தபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற அந்தகன் படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் தபு நடித்த வில்லி கதாபாத்திரத்தில் பிரசாந்த் உடன் நடித்து வருகிறார் சிம்ரன். 


இருப்பினும் அந்த படம் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் நிறைவடைந்ததும் இன்னமும் படம் ரிலீஸ் ஆகவில்லை. எனவே விரைவில் வெளியாகும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பல நடிகைகள் 40 வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்யாமல் உள்ள நிலையில், 2003ம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து சிம்ரனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.


இந்நிலையில் சமீபகாலமாக நடிகை சிம்ரன் ஒரு படத்துக்கு 50 லட்சம் முதல் 60 லட்சம் வரை வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் சிம்ரன் ஒட்டுமொத்தமாக 20 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளன. அதாவது சினிமா, விளம்பர படங்கள், ரியாலிட்டி ஷோ  போன்றவற்றின் மூலமாக இவர் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement