• Jul 23 2025

எழிலுடன் இணைந்த அமிர்தா... தைரியம் சொல்லும் பாக்கியா... எதிர்பாராத பல திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'பாக்கியலட்சுமி'. இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். எது எவ்வாறாயினும் இந்த சீரியலானது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.

அந்தவகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் எழிலும், அமிர்தாவும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுகின்றார்கள். அதாவது எழில் அமிர்தாவிடம் " வீட்டில் இருந்து யாராவது வந்து பேசணும் என்று சொன்னாங்க நான் டைம் கேட்டேன்" எனக் கூறுகின்றார். அதற்கு விக்கி விக்கி அழுத அம்ரிதா எழிலிடம் "எனக்குப் பயமாய் இருந்திச்சு" எனக் கூறுகின்றார். 


இதனைத் தொடர்ந்து அமிர்தா பாக்கியாவிடம் போனில் பேசுகின்றார். அதாவது "எனக்கு எழிலைப் பிடிக்கும், உங்களை ரொம்பப் பிடிக்கும், உங்க வீட்டைப் பிடிக்கும், ஆனால் இப்பிடி ஒரு வாழ்க்கைக்கு நான் தகுதியானவளா, ஆசைப்படலாமா அது எதுவுமே எனக்குத் தெரியலம்மா, அதுதான் பயந்து ஓடி வந்திட்டேன்" எனக் கூறி அழுகின்றார். 

இதைக் கேட்டதும் பாக்கியா தைரியமாக இருக்குமாறு கூறி ஆறுதல் கூறுகின்றார். இவ்வாறாக இந்தவாரப் ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. 

  

Advertisement

Advertisement