• Jul 23 2025

தேர்தலில் களமிறங்கிய சரவணன்... கை எடுத்துக் கும்பிட்டுக் கதறி அழும் சிவகாமி.. நடக்கப் போவது என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி-2. விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள். 

இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில் சரவணனைப் பார்த்து அவரின் தாயார் "தயவு செய்து இந்தத் தேர்தலிலிருந்து வாபஸ் வாங்கிடு சரவணா" எனக் கூறி  காய் எடுத்துக் கும்பிட்டு அழுகின்றார். 


அதற்கு சரவணன் "இந்தக் குடும்பத்திற்காக என்னால முடிஞ்ச எல்லாத்தையுமே செஞ்சிருக்கேன், படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போற சூழ்நிலை வந்தப்போ கொஞ்சம் கூட யோசிக்காமல் வேலைக்கு போனேன், என் வாழ்க்கையில் எனக்கு என்று நான் எடுத்த ஒரே முடிவு இதுதான் அம்மா" எனக் கூறுகின்றார்.

செந்தில் உன்னை எதிரியாகவே பார்க்க ஆரம்பிச்சிட்டானே எனத் தாயார் கூறுகின்றார். இது எனக்கும் அவனுக்குமான போட்டி இல்லை, எனக்கும் அந்த ஊழல்வாதி பரந்தாமனுக்குமான போட்டி, அந்தப் பரந்தாமனை தோற்கடிக்கணும், என்ன ஆனாலும் சரி இந்தத் தேர்தலிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனக் கூறி விடாப்பிடியாக நிற்கின்றார் சரவணன்.

இவ்வாறாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

 

Advertisement

Advertisement