• Jul 23 2025

கோபத்தில் பொங்கி எழுந்து சவால் விட்ட மீனா... இவளா இப்படிப் பேசுறது... அதிர்ச்சியில் உறைந்த அப்பா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்த தொடரிற்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அதுமட்டுமல்லாது இந்தத் தொடரில் நாளுக்கு நாள் பல எதிர்பாராத திருப்பங்களும் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன.

அந்தவகையில் இந்தத் தொடரில் தற்போது மீனாவின் தங்கை நிச்சயதார்த்தத்திற்காக மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் எல்லோரும் அங்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் அவர்களை மீனாவின் அப்பா மிக மோசமாக அசிங்கப்படுத்துகிறார்.


அதாவது அங்கு வந்த அவர்கள் எல்லோரையும் மீனா சாப்பிட உட்காரவைத்துவிட்டு சென்றுவிடுகிறார். அப்போது அங்கு வரும் மீனாவின் அப்பா அவர்களை அசிங்கப்படுத்தி பேச, அவர்கள் அனைவரும் கோபத்தில் எழுந்து சென்றுவிடுகிறார்கள்.

அங்கு நடந்த விஷயம் பற்றி அதற்கு பிறகு அதற்குப் பிறகு அந்த இடத்திற்கு வந்த மீனாவிடம் சொல்கிறார்கள். அதை கேட்டு கொந்தளிக்கும் மீனா நேராக அப்பாவிடம் சென்று தாறுமாறாக பேசி சண்டை போடுகிறார்.


அதாவது "அந்த குடும்பம் உங்களை என்ன செய்தது. நீங்கள் அவர்களை அசிங்கப்படுத்தல.. என்னை அசிங்கப்படுத்தி இருக்கீங்க. இவ (தங்கை) திருமணத்திற்குள் அவங்ககிட்ட நீங்க கெஞ்சிட்டு நிப்பீங்க. அந்த நாள் வரும் பாருங்க" என சவால்விட்டு செல்கிறார். இதை கேட்டதும் மீனாவின் அப்பா கடும் அதிர்ச்சியாகி நிற்கிறார்.  


Advertisement

Advertisement