• Jul 24 2025

ADK பெற்றோரிடம் ஷிவின் குறித்து தவறாகப் பேசி மாட்டிக் கொண்ட அமுதவாணன்- பதிலுக்கு அவர்கள் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்

முதலில் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்த வண்ணம் இருப்பதால், பிக் பாஸ் வீடே தற்போது எமோஷனல் மோடிற்கு மாறி உள்ளது. தற்போது விக்ரமனின் பெற்றோர் மற்றும் கதிரவனின் தாய் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளனர்.


இதனிடையே, பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருந்த ADK-வின் தாய் மற்றும் தந்தை ஆகியோர், அனைத்து போட்டியாளர்கள் குறித்து நிறைய சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.  ஏடிகேவின் பெற்றோர் உள்ளே வரும் போது டீ போடவும் போட்டியாளர்கள் கேட்கின்றனர். அப்போது ஷிவினிடம் அமுதவாணன் அதை சொல்கிறார். இதனைத் தொடர்ந்து, ஷிவின் சரியாக டீ போட்டுக் கொடுக்க மாட்டார், ஆனால் வாராவாரம் கமல் சார் கிட்ட எல்லார் பத்தியும் போட்டுக் கொடுப்பார் என்று ADK தந்தையிடம் அமுதவாணன் சொல்கிறார். ஆனால், ஷிவின் அப்படி ஒன்றும் இல்லை என்றும் அவர் எல்லா வேலைகளை செய்வதை நானே பார்த்து இருக்கிறேன் என்றும் ஏடிகேவின் தந்தை கூறுகிறார். தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஷிவினின் விளையாட்டை கவனித்து நிறைய கருத்துக்களை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement