• Jul 25 2025

சூப்பர்ல.....புது வீட்டில் குடியேறியதும் ரசிகர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த தனுஷ்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல  நடிகர் தனுஷ், போயஸ் கார்டனில் கட்டியுள்ள புது வீட்டில் குடியேறியதும் தனது ரசிகர்களை அவர்களது குடும்பத்தினருடன் வர வைத்து, அவர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

நடிகர் தனுஷ் ரசிகர்கள் மீது தீராத அன்பு வைத்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாகவே அவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்ததும் நெகிழ்ந்து போன தனுஷ், உங்களுக்காக நான் என்ன செய்யப்போகிறேனோ என மேடையில் எமோஷனலாக பேசி இருந்தார்.

அதுமட்டுமின்றி அந்த விழா முடிந்ததும், தன்னுடைய ரசிகர் மன்ற தலைவர்களை அழைத்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் செய்து வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து கேட்டறிந்த தனுஷ், தானும் தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்து இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தன்னுடைய  ரசிகர்களையும்  அவர்களது குடும்பத்தினருடன் வர வைத்து, அவர்களுக்கு பரிசுகள் வழங்கியதோடு, தடபுடலாக விருந்தும் வைத்துள்ளார்.

 இறுதியாக அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார் தனுஷ். அந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வரும் ரசிகர்கள், இப்படிப்பட்ட ஒரு நடிகருக்கு ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement