• Jul 25 2025

நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கடுமையான பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபடும் அர்ச்சனாவின் மகள் ஷாரா- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் அர்ச்சனா. இதையடுத்து திருமணம் செய்துகொண்டு சின்னத்திரையில் இருந்து சில ஆண்டுகள் விலகியே இருந்த அர்ச்சனா, பின்னர் மீண்டும் தொகுப்பாளினியாக எண்ட்ரி கொடுத்தார்.

 ஷீ தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு ட்ரோல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தார்.


இருந்தாலும் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அர்ச்சனா தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்ததோடு, படங்களிலும் நடிக்கத்தொடங்கினார். அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

இவருடைய மகளான ஷாராவும் டாக்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்த சூப்பர் மம் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருக்கின்றார். இப்போது படிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் பாக்ஸிங் கற்றுக் கொண்டு வருகின்றார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement