• Jul 25 2025

பிக்பாஸ் ஷிவானிக்கு திருமணமா..? மாப்பிள்ளை யார்..? வெளியான போட்டோவால் ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் 'பகல் நிலவு, இரட்டை ரோஜா' போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதுமட்டுமல்லாது பிக்பாஸ் 4-ஆம் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு பல சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார். அதாவது சக போட்டியாளரான பாலாவுடன் காதல் வசப்பட்டதாக கூறப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து மென்மேலும் புகழ்பெற்ற ஷிவானி அதற்குப்பிறகு சின்னத்திரைக்கு டாட்டா காட்டிவிட்டு வெள்ளித்திரைப் பக்கமாக சென்றார். அந்தவகையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து இருந்தார். 

இதனையடுத்து தற்போது 'பம்பர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கேரள லாட்டரி பற்றிய கதையம்சத்தைக் கொண்ட இப்படத்தில் ஷிவானி நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இப்படத்தின் உடைய இறுதிக் கட்டப் பணிகள் யாவும் நிறைவடைந்துவிட்ட நிலையில், இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் எப்போதும் இன்ஸ்டாகிராமில் அதிகம் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிற ஷிவானி தற்போது வழக்கத்திற்கு மாறாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் கமெண்டில் அவருக்கு திருமணம் என்று நினைத்து மாப்பிள்ளை யார் என்று கேட்டு வாழ்த்துக்கள் சொல்ல தொடங்கி விட்டார்கள். இருப்பினும் இது போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் எனப் பின்னர் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.



Advertisement

Advertisement