• Jul 24 2025

குடும்பத்துடன் திடீரென திருப்பதி கோவிலுக்குச் சென்ற இயக்குநர் ஷங்கர்- வைரலாகும் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வருபவர் தான் ஷங்கர்.இவர் தற்பொழுது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.இது தவிர தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தையும் இயக்கி வருகிறார்.

மேலும் ஒரு ஹிந்திப் படத்தில் பணியாற்றவும் ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.  ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை அடுத்து இயக்க இருக்கிறார் ’.இதில் RC15 படத்தின் துவக்க விழா செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. 


இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி நடித்து வருகிறார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


அதேபோல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். 

அவருடன் அவருடைய மனைவி ஈஸ்வரி, மகன் அர்ஜித், மகள் அதிதி ஷங்கர் ஆகியோர் உடன் உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement