• Jul 24 2025

பழம் பெரும் நடிகர் எம்ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திய விஷால்- தீயாய் பரவும் வைரல் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் நடிகராக இருக்கும் போதே தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என சினிமா அரசியலில் ஆர்வம் காட்டி வெற்றியும் பெற்றார் விஷால். சமீப காலமாக நேரடி அரசியலிலும் ஆர்வம் செலுத்தி வரும் விஷால் சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டி இருந்த நிலையில், அவரும் விஷாலுக்கு பதில் ட்வீட் போட்டிருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் ரொம்பவே உழைப்பை சிந்தி விஷால் நடித்திருந்த லத்தி திரைப்படமும் வெளியாகி சொதப்பியது. பொங்கலுக்கு சன் டிவியில் சிறப்பு திரைப்படமாகவே லத்தியை போட்டு விட்டனர்.


நடிகர் விஷால் இலவச ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பது. காசிக்கு சென்று பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியை புகழ்வது என தொடர்ந்து தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இப்படியொரு டாட்டூ போட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

புரட்சித் தலைவர் என மக்களால் கொண்டாடப்பட்ட நடிகரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் திருவுருவத்தை தனது நெஞ்சில் பச்சையாக குத்தியுள்ளார் . சட்டை அணியாமல் நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூவை காட்டும் படி எடுத்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 


எம்ஜிஆரின் தீவிர ரசிகரான விஷால் நீண்ட நாட்களாக இப்படியொரு டாட்டூவை குத்த வேண்டும் என நினைத்து வந்த நிலையில், தற்போது குத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால் ரசிகர்கள் பலரும் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement