• Jul 24 2025

அஜித் கூட நடிச்ச மந்த்ராவை நியாபகம் இருக்கா..இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! அட நம்பவே முடியலையே..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி புயலாக ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் அடித்து சென்றவர்தான் இந்த மந்த்ரா. கொழுகொழு தேகத்தால் மொத்த இளைஞர்களையும் தன் பக்கம் சுண்டி இழுத்தவர்.

தெலுங்கு சினிமாவை மையமாகக் கொண்டாலும் தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றவர். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக கலக்கினார்.

தமிழில் விஜய், அஜீத் என முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். லவ் டுடே படத்தில் விஜய்யின் தோழியாகவும், ரெட்ட ஜடை வயசு படத்தில் அஜித்துடன் நடித்தார்.

அதுமட்டுமில்லாமல் ராஜா படத்தில் அஜித்துடன் இவர் போட்ட வத்தலகுண்டு பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸ். வழக்கம்போல் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தற்சமயம் கூட அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வாலு, ஒன்பதுல குரு போன்ற படங்களில் தலையை காட்டி விட்டு சென்ற மந்த்ரா ஆண்டி ஆகவும் இன்னொரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.


Advertisement

Advertisement