• Jul 24 2025

என்ன மேடம் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க! -'ஜனவரி 1 நம்ம புத்தாண்டே கிடையாது' - நமீதாவின் வைரல் வீடியோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

2004ல் வெளியான "எங்கள் அண்ணன்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா. கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ’மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் எல்லாரையும் மச்சான்ஸ் என்று அழைத்து அவருடைய ட்ரேட் மார்க் வார்த்தையே மாறியது மச்சான்ஸ்.  தொடர்ந்து, விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறிய நமீதா, கொஞ்ச காலம் முன்பு பாஜகவில் இணைந்து பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் எல்லாம் செய்தார். 



கடந்த 2017ம் ஆண்டு நடிகை நமீதா நடிப்பில் இருந்துவிலகி  வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இவர்களுக்கு கடந்த ஆண்டு கிருஷ்ணா ஜெயந்தி நாள் அன்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

 

குழந்தைகள் மற்றும் கணவரோடு எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது பதிவிட்டு வந்தார். ஆனா, அது நம்மளோட கலாச்சாரம் கிடையாது. வீ ஆர் ப்ரவுடுலி இந்தியன்ஸ். வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு வருகிறது. 

இது ரொம்ப பக்கத்தில் இருக்கிறது. இந்த பண்டிகையை உங்க பிரண்ட்ஸ் அண்ட் குடும்பத்தோட கொண்டாடுங்க.. காலையில் எழுந்திரிருச்சு குளிச்சுட்டு கோவில் போய்ட்டு வாங்க.. மறுபடியும் சொல்றேன் ஜனவரி 1 நம்ம புத்தாண்டு கிடையாது, ஏப்ரல் 14 தான் நம்ம புத்தாண்டு.. எல்லாரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.. “ என்று தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களின் கருத்த்துக்களை பதிவிட்டு வைரலாகி வருகின்றனர். 


Advertisement

Advertisement