• Jul 25 2025

கோவை குணாவின் திடீர் மரணத்திற்கு காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த காமெடி நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு' எனப் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடியனாக பங்கேற்று தனது மிமிக்ரி திறமையால் பல கோடி ரசிகர்களை சிரிக்க வைத்த கோவை குணா நேற்று மாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.


இதற்குப் பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆரம்ப காலத்தில் நடுவராக இருந்து வந்த பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் "கோவை குணா போல ஒரு திறமையான கலைஞனை இழந்து விட்டோமே" என மன வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் "கோவை குணாவின் தீவிர ரசிகன் நான் என்றும் தான் நடிக்க வேண்டிய சென்னை காதல் படத்தில் எனக்கு பதிலாக அவரை நடிக்க பரிந்துரைத்தேன். ஆனால், அதன் பிறகு அதிகமாக சினிமா படங்களில் அவர் நடிக்கவே இல்லை. சினிமா கலைஞர்கள் அதிகளவில் கெட்ட பழக்கத்திற்கு ஆளாகி விடுவது தான் வெகு சீக்கிரமாகவே மரணித்து விடுகின்றனர்" என்கிற விஷயத்தை வெளிப்படையாகவே பேசி உள்ளார் மதன் பாப்.


அதாவது "மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியே பலரும் சீக்கிரமாக மாரடைப்பு ஏற்பட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டும் உயிரிழக்கின்றனர். ஓரளவுக்கு எல்லாத்தையும் வச்சிக்கிட்டா நம்ம உடம்புக்கு நல்லா இருக்கும். தண்ணீரில் படகு போனால் ஓடும், படகுக்குள் ஓட்டை விழுந்து விட்டால் படகு தண்ணீருக்குள் மூழ்கிவிடும்" என்றார்.


மேலும் "இந்த நேரத்தில் இதனை பேசக் கூடாது என்றாலும் என் மனது கேட்கவில்லை உண்மையை சொல்கிறேன். கோவை குணா மரணத்திற்கு மட்டுமின்றி சமீபத்தில் உயிரிழந்த சில பிரபலங்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமே இந்த குடி போதை தான்" எனவும் மறைமுகமாக கூறியுள்ளார் மதன் பாப்.

Advertisement

Advertisement