• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிவாஷினி பெற்ற சம்பளம் இவ்வளவு தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு, அரண்மனையாகவும், அருங்காட்சியகமாகவும் மாறியது. அரண்மனையில் இருப்பது போலவே, பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, ராணி, படைத்தளபதி, மந்திரி, என மாறி போட்டி போட்டு கொண்டு தங்களுடைய பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியது ஒரு புறம் இருந்தாலும் மற்றொரு புறம், பிரச்சனைகளும் பற்றி கொண்டு எரிந்தது.

அதனை அடுத்து அசீம் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நேற்றைய தினம் நிவாஷினி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவருடன் சேர்த்து 6 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


ஒரு மாடலாக தன்னை அடையாளப்படுத்தி மக்களின் மனதை வென்ற இவர் பிக்பாஸில் கலந்துகொள்ள ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே 5 வாரத்திற்கும் சேர்த்து 50 ஆயிரத்திற்கும் அதிகமாக பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இருப்பினும் இது குறித்த சரியான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement