• Jul 24 2025

விஜய்யை வைத்து வெற்றிமாறன் படம் எடுக்காததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?… விஷயத்தை கேட்டு வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.அத்தோடு  ரசிகர்கள் பலரும் “விடுதலை” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“விடுதலை” திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு வெற்றிமாறன், விஜய்க்கு ஒரு கதை சொன்னதாக பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் சில காரணங்களால் அந்த கதையை படமாக்க முடியவில்லை.

 இவ்வாறுஇருக்கையில் வெற்றிமாறன் விஜய்யை வைத்து படம் இயக்க முடியாமல் போன காரணத்தை குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது விஜய், எப்போதும் தான் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில்தான் அடுத்த திரைப்படத்திற்காக கதையை கேட்பாராம். அவ்வாறுதான் வெற்றிமாறனிடம் விஜய் கதை கேட்டுள்ளார். ஆனால் வெற்றிமாறன் இயக்க வேண்டிய திரைப்படங்கள் வரிசையில் இருந்தது. 

அத்தோடு விஜய்க்கு உடனே படப்பிடிப்பு தொடங்கவேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் வெற்றிமாறனுக்காக விஜய் காத்துக்கொண்டிருக்க முடியாது என்பதால்தான் அந்த புராஜெக்ட் ஒர்க் அவுட் ஆகவில்லையாம். இவ்வாறு அந்த பேட்டியில் பத்திரிக்கையாளர் பிஸ்மி  தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement