• Jul 24 2025

குக்வித் கோமாளி வெங்கடேஷ் பட் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருந்தாரா?- இதனால் தான் அதை எல்லாம் விட்டாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரக்‌ஷன். நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருப்பவர்கள் செஃப் தாமோதரன் மற்றும் வெங்கடேஷ் பட். நிகழ்ச்சி ஆரம்பித்து 4வது சீசனாகியும் இன்னும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒரு நடுவரான வெங்கடேஷ் பட்டை பற்றி பல கிசுகிசுக்கள் வருகின்ற நிலையிலும் இப்போது அவரின் வாழ்க்கையை பற்றி ஒரு சுவாரஸ்ய சம்பவம் வைரலாகி வருகின்றது. அதாவது வெங்கடேஷ் பட்டிற்கு திருமணமாகி 7 வருடங்கள் கடந்த நிலையிலும் குழந்தை இல்லாமல் இருந்ததாம்.


அதன் பின் மனைவி கர்ப்பமான நிலையில் மது, புகை என தனக்கு இருந்த அனைத்து கெட்டப்பழக்கத்தையும் கைவிட்டிருக்கிறார். குழந்தை பிறந்ததும் முதலில் திருப்பதியில் போய் பெருமாளை சந்தித்து விட்டு தான் தன் குழந்தையை பார்ப்பேன் என்று சொல்லியிருந்தாராம்.

ஆனால் குழந்தை பிறந்து 10 நாள்களுக்கு கோயிலுக்குள் போகக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்ததனால் அதுவரை காத்திருந்து 11 நாள் ஆன பின் தான் தன் பெண் குழந்தையை பார்த்திருக்கிறாராம். அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசப்பிணைப்பு எப்படி பட்டது என அனைவருக்கும் தெரிந்த ஒன்று.


ஆனாலும் நீண்ட வருடங்களாக காத்திருந்து குழந்தை பிறந்த நிலையிலும் தன் குழந்தையை பார்க்க முடியாத சூழ் நிலையில் இருந்த வெங்கடேஷ் பட்டின் நிலையை நினைத்து கொஞ்சம் மனம் மெய்சிலிர்க்கத்தான் வைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..

Advertisement

Advertisement