• Jul 25 2025

விக்ரம் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்த நடிகையா இது?- பிகினி உடையில் பாலிவூட் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போல இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்சேதுபதி, காயத்ரி சங்கர் நடிப்பில் உருவான "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" படத்தில் "ப்பா" என்ற வசனத்தை இன்றளவும் மறக்க முடியாது. அந்த வசனத்தால் பிரபலமான காயத்திரி சங்கர் 2012ம் ஆண்டு வெளியான 18 வயது திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் சினிமாவில் நுழைந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேலாகிய போதும் இப்போதும் அதே அழகுடன் இருக்கிறார்


விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் ,ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்ததால், இருவர் குறித்தும் கிசுகிசுவில் சிக்கினாலும், விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிப்பதேயே விரும்புவதாக காயத்ரி பல பேட்டிகளில் கூறியுள்ளார்.


அண்மையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த விக்ரம் படத்தில், மலையாள நடிகர் பகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்தார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் காயத்ரி சங்கரின் கதாபாத்திரம் பாராட்டும் வகையில் இருந்தது. விக்ரம் படத்தைத் தொடர்ந்து தமிழ், மலையாளப்படங்களில் நடித்து வருகிறார்.


குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த காயத்ரி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கப்பலில் நின்றுகொண்டு பாலிவூட் நடிகையைப் போல டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ளார். காயத்ரி சங்கரின் புகைப்படத்தை பார்த்து இது உண்மையில் காயத்ரி சங்கர் தானா என்ற சந்தேகமே வரும் அளவுக்கு படு கவர்ச்சியாக உள்ளது. இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் இதெல்லாம் என்று வருத்தத்துடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement