• Jul 25 2025

வந்தே 5வருஷம் தான்.. அதற்குள்ள இத்தனை பங்களாவா..? சொத்து மதிப்பு குறித்து ராஷ்மிகாவின் அதிரடிப் பதில்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் புகழ் பெற்ற பெண் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா. அந்தவகையில் இவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். அதுமட்டுமல்லாது 'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.


இருப்பினும் ‘சுல்தான்’ என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அத்தோடு அண்மையில் வெளியான விஜய்யின் 'வாரிசு' படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். 


மேலும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்த தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க்கவுட் ஆவதாக ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஒன்றாக டேட்டிங் சென்றதாக கூட இணையத்தில் செய்திகள் பரவியது. 


இவ்வாறு எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சினிமாவில் பிசியாக வலம் வரும் ராஷ்மிகா, சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் ராஷ்மிகா குறித்த மீம் ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. அதாவது அதில், ராஷ்மிகா 5 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் ஹைதராபாத், கோவா, கூர்க், மும்பை, பெங்களூரு என 5 இடங்களில் சொகுசு பங்காளவை வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மீம்ஸிற்கு பதிலளித்துளள ராஷ்மிகா, இது உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பாசிட்டிவ்வான பதிலினை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement