• Jul 24 2025

பிக்பாஸ் வீட்டிற்குள் பணப் பெட்டியுடன் என்ட்ரி கொடுக்கவுள்ள ஜனனி- எதிர்பார்க்காத டுவிட்ஸ்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும் என்பதால் பழைய ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தற்பொழுது வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். நடனம் பாட்டு கொண்டாட்டம் சண்டை என வேற லெவலில் நடைபெற்றுக் கொண்டருக்கின்றது.

அத்தோடு நேற்றைய தினம் ஏடிகே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.தற்பொழுது அமுதவாணன் ,மைனா நந்தினி ,விக்ரமன், அசீம், ஷிவின், கதிரவன் ஆகிய 6பேர் மாத்திரமே உள்ளனர்.இதில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.


மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் வந்திருந்தாலும் ஆயிஷாவும் ஜனனியும் வரவில்லை. இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஜனனி பணப் பெட்டியுடன் உள்ளே வர இருப்பதாக கூறப்படுகின்றது.

அத்தோடு அவர் முதலே உள்ளே வராமல் போனதற்கு காரணம் அவருடைய உடை இன்னும் சரிசெய்யப்படாதது தான் காரணம் என்றும் புதிய தகவல் வெளியாகயுள்ளதைக் காணலாம்.ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றே கூறலாம்.



Advertisement

Advertisement