• Jul 25 2025

இந்தியன் 2 படப்பிடிப்பில் ரசிகர்கள் வெள்ளத்தால் மூழ்கிய கமல்! வைரலாகும் வீடியோ

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கமல்ஹாசன் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் ஷங்கருடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 தற்போது கல்பாக்கத்தில் உள்ள சத்ராஸ் டச்சு கோட்டையில் நடந்து வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் வருகையை கேள்விப்பட்ட அருகிலுள்ள பகுதிகளில் இருந்து ரசிகர்கள், நடிகரை சந்திக்க படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படபிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறும்போது ரசிகர்கள் அவரை பார்த்து கூச்சலிட்டு கத்தினர். உடனே, கமல்ஹாசன் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், அந்த வீடியோவில், கமல்ஹாசன் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். 

இந்த படத்தில், காஜல் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement