• Jul 25 2025

''பாலியல் சீண்டல்களை தடுக்க ஆண்கள் குரல் கொடுக்க வேண்டும்'' - பிக் பாஸ் ரச்சிதா ஓபன் டாக்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக பெண்களுக்கு பெரிய திரையில் மட்டுமல்ல , சின்னத்திரையிலும் பாலியல் தொல்லை அதிகரித்திருக்கிறது. இதனை வாணி போஜன், பாண்டியன் ஸ்டோர் தீபிகா போன்றோர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சரவணன் மீனாட்சி தொடர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி இது பற்றி கூறியதாவது, உலகம் தோன்றிய நாள் முதலாகவே இது இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தநிலை மாறும் என்பதெல்லாம் பொய். இது மாறவே மாறாது. மாறுமென்று ஆறுதலுக்காக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதனால் நம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நமக்காக யாரும் வந்து குரல் கொடுக்க மாட்டார்கள். காப்பாற்றவும் மாட்டார்கள். ஒரு இடத்திற்குத் தனியாகப் போக வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த பாதுகாப்போடும், துணிவோடும் தயாராக வேண்டும். இல்லையென்றால் முன்னேற முடியாது. இக்கட்டான சூழல் வந்தால் நோ என்று சொல்லுங்கள். உங்களை மீறி எந்த தவறும் நடக்காது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். இங்கே யாரும் யாருக்கும் உதவ மாட்டார்கள்.

பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பி விட்டுப் பெற்றோர்கள் பயந்து நடுங்குகிறார்கள். மீண்டும் பழைய நிலை வந்து பெண்களை வீட்டிற்குள் பூட்டி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. இதனை மாற்ற ஆண்கள் பெண்களுக்கு ஆதரவாக போர்க்குரல் கொடுக்க வேண்டும். அப்படி நடந்தால் பெண்களுக்கு நம்பிக்கை பிறந்து விடும். சரிநிகர் சமமான நிலை என்பது இதுதான என்றார் ரச்சிதா.

Advertisement

Advertisement