• Jul 25 2025

ஐஸ்வர்யா ராய்க்கு படத்தில் ஓவர் மேக்கப்.. சுத்தமா நல்லா இல்ல.. வனிதா விஜயகுமார் ஓபன் டாக்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

எழுத்தாளர்  கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்கில் வெள்ளிக்கிழமை வெளியானது.தமிழ் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் பலர் முயன்று முடியாமல் போன நாவலை, மணிரத்னம் பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி இருக்கிறார்.

 பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கு கலேக்ஷனை அள்ளியது. பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்காதவர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் திரையரங்கிற்கு படைஎடுத்து வந்தனர். நந்தினி ஆதித்த கரிகாலனை பழி தீர்த்தாரா? ஊமை ராணி யார்... பொன்னியின் செல்வனுக்கு என்ன ஆனது என பல எதிர்பார்ப்புடன் முதல் பாகம் ஆவலை தூண்டி இருந்தது.

ஆனால், இரண்டாம் பாகம் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்றும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனம் வந்து கொண்டு இருக்கிறது. மேலும், கிளைமாக்ஸ் காட்சியில் மணிரத்னம் புத்தகத்தில் இல்லாத கிளைமாக்சை கொடுத்து ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படம் பார்த்த வனிதா விஜயகுமார், பொன்னியின் செல்வன் புத்தகத்தை நான் படித்தது இல்லை. முதல் பாகம் பார்த்ததால் இரண்டாம் பாகத்தின் கதை எனக்கு புரிந்தது. அந்த படத்தில் வந்திய தேவன் நடிப்பும் சூப்பர். அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று மணிரத்னம் யோசித்து அந்த கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார்.

குந்தையாக வரும் த்ரிஷா அழகு பதுமையாக இருக்கிறார். அவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. ஆனால், ஒரு சின்ன மன வருத்தம் ஐஸ்வர்யா ராயை இளமையாக காட்டவேண்டும் என்பதற்காக ஓவராக மேக்கப் போட்டு விட்டார்கள், அது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. ஊமை ராணி ரோலில் மேக்கப்பமே இல்லாமல் அவர் அழகாக இருந்தார். மேக்கப்பை குறைத்து இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்றார் .


Advertisement

Advertisement