• Jul 24 2025

செருப்பால் அடிவாங்கிய செல்வராகவன் ; இயக்குநருக்கே இந்த நிலமையா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநராக தன்னை சிறப்பாக வெளிப்படுத்திவந்த செல்வராகவன், நடிகராகவும் சமீப காலங்களில் நடித்து வருகிறார். சாணிக் காயிதம், பீஸ்ட் மற்றும் நேற்றைய தினம் வெளியாகியுள்ள பகாசூரன் என அடுத்தடுத்த வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் செல்வராகவன்.

அடுத்ததாக இவரது இயக்கத்தில் என்ன படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பகாசூரன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய செல்வராகவன், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதனிடையே தான் தன்னுடைய தந்தை கஸ்தூரி ராஜாவிடம் செருப்படி பட்டது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் செல்வராகவன் பகிர்ந்துள்ளார். தன்னுடைய தந்தையிடம் சென்று தான் படித்தது போதும் என்றும் சினிமாவிற்கு செல்கிறேன் என்று தான் கூறியதாகவும் அதற்கு அவர் தன்னை செருப்பால் அடித்ததாகவும்  தெரிவித்துள்ளார்.


சினிமாவிற்கு செல்ல விரும்பிய செல்வராகவனை கஸ்தூரி ராஜா செருப்பால் அடித்துள்ளார். ஆனால், அந்த சினிமாதான் தற்போது செல்வராகவனை சர்வதேச அளவில் அனைவரும் அறியும் வண்ணம் செய்துள்ளது. சினிமாவில் இயக்குநராக இருந்த கஸ்தூரி ராஜா தன்னுடைய மகன் சினிமாவிற்கு செல்வதை விரும்பாத நிலை இருந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement