• Jul 26 2025

விக்ரமனை பார்க்க வந்த நபர்கள்...நீண்ட நேரம் Freeze இல் வைக்கப்பட்ட போட்டியாளர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது  விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

எனினும் இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளார்கள்.முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

மேலும் அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

இந்நிலையில் மைனா ,ரச்சிதா அமுதவாணன் ADK மணிகண்டன் ஷிவின் கதிரவன் உள்ளிட்ட போட்டியாளர்களின் குடும்பம் வந்த நிலையில் தற்போது விக்ரமனின் அப்பா மற்றும் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் உள்நுழைந்துள்ளனர்.எல்லோரும் அவர்களை வரவழைத்து நன்றாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement